Categories
உலக செய்திகள்

“இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சண்டை சேவல்கள்”…. இலங்கை கடற்படை அதிரடி நடவடிக்கை….!!!!!!!

இலங்கையில் சேவல் சந்தைக்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சேவல் சண்டையில் ஆர்வம் உள்ள சில பேர்  இந்தியாவிலிருந்து சண்டை சேவல்களை கடத்தி வந்து இருக்கின்றனர். மன்னார் நகரில் இருந்து கொண்டு செல்வதற்காக  அவற்றை ஒரு இடத்தில் ஒன்றாக கட்டி வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரை கண்ட உடன்  சேவல்  கடத்தல்காரர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

மேலும் அவர்கள் விட்டுச் சென்ற  சேவல்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஏழு சேவல்கள் ஏற்கனவே இறந்துள்ளது. இந்த நிலையில்  கைப்பற்றப்பட்ட சேவல்கள் மன்னார் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 5 ஆட்டுக்கடாக்களையும் இலங்கை கடற்படை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |