பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனம் சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றான பரம் பிரவேகா தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள
பரம் பிரவேகாவின் கம்ப்யூட்டிங் திறன் 3.3 பெட்டாஃப்ளாப்ஸ் என்றும் 1 பெட்டாஃப்ளாப் என்பது வினாடிக்கு குவாட்ரில்லியன் செயல்பாடுகளுக்கு சமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பரம் பிரவேகா இன்டெல் ஜியோன் கேஸ்கேட் லேக் சிபியுக்கள் மற்றும் என்விடியா டெஸ்லா வி100 ஜிபியுக்கள் ஆகியவற்றுடன் பன்முக முனைகளின் கலவையைக் கொண்டுள்ளது. ஆடோஸ் புல்செகுவானா XH2000 தொடர் அமைப்பைப் பயன்படுத்தி 3.3 பெட்டா ப்ளாப்களின் உச்ச சூப்பர் கம்ப்யூட்டிங் திறன் கிடைக்கப்பெறுகிறது.