Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் லயோலோ மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, பி.வில்சன், எம்எல்ஏக்கள் நா. எழிலன், இனிகோ இருதயராஜ், லயோலா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் ஜோ.அருண், மதுரை இயேசு சபை மாநில தலைவர் ஜே டேனிஷ் பொன்னையா, சென்னை இயேசு சபை மாநில தலைவர் ஜெபமாலை இருதயராஜ், லயோலா கல்லூரி கல்வி நிறுவனங்களின் அதிபர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் நிர்வாக தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு பேசிய முதல்வர், கருணாநிதி குடும்பத்திற்கும் லயோலா காலேஜ்க்கும் பெரிய தொடர்புள்ளது. எங்கள் குடும்பத்தில் இருந்து என்னுடைய அண்ணன் அழகிரி, கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் இந்த கல்லூரியில் படித்து வந்தவர்கள். எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத கல்லூரி என்றால் அது லயோலா கல்லூரி தான் இருக்க முடியும்.

இதையடுத்து லயோலா காலேஜில் தொழில் நுட்ப கல்லூரியை கருணாநிதி திறந்து வைத்தார் .தற்போது மேலாண்மை கல்லூரியை நான் திறந்து வைத்துள்ளேன் என்று கூறினார். இதையடுத்து தமிழகத்தில் அனைவரும் அடிப்படை கல்வி இலக்கை அடைந்துவிட்டோம். அதன் பிறகு அனைவரும் ஒரு பட்டம் என்ற இலக்கை அடைந்த முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் இருண்டு நிலையில் கிடந்த தமிழகத்தை ஒளிமயமான பாதையில் வீறுநடை போட வைத்திருக்கும் திமுக ஆட்சி பொருளாதார வளர்ச்சியும் உருவாக்கும். மேலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி காட்டுவதற்கு தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இதையடுத்து இந்திய மாநிலங்களில் 10 மாநிலங்களை குறிப்பிடும் போது அதில் முதலிடத்தில் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்று பெருமையாகச் சொன்னார்கள். ஆனால் நம்முடைய மாநிலம் முதல் இடத்தில் இருப்பது தான் எனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |