சென்னையில், லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன் பின்னர் பேசியதாவது, “தமிழகத்தில் அனைவரும் அடிப்படை கல்வியை பெறும் இலக்கை எளிதாக அடைந்து விட்டோம். இதனைத் தொடர்ந்து அனைவரும் பட்டப்படிப்பு பெரும் இலக்கினை விரைவில் நாம் அடைவோம். ஆகவே தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்றவர்களாக வளர வேண்டும் மற்றும் வாழ வேண்டும். இந்த இலக்கை எட்டிய முதல் மாநிலமாக தமிழகம் வரவேண்டும்.
திமுகவானது ஆட்சி அமைத்து 100 நாட்களில் பல நூற்றுக்கணக்கான திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளது. மேலும் இருண்ட நிலையில் இருந்த தமிழ்நாட்டை ஒளிமயமான மாநிலமாக மாற்றி, தற்பொழுது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தை சமூகநீதி உடைய பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். எனவே எல்லா சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து செல்லும் அரசாக நமது அரசு அமையும். ஆகவே இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி காட்டுவோம். இந்த மாற்றத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்