தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இந்நிலையில் நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதில் தமிழகம் தான் முதலிடம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 37 சதவீதம் முன்கள பணியாளர்கள் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளதாக கூறிய அவர்,96 தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு அதிக விலை நிர்ணயித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.