Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே முதன் முதலாக…. 32 அடியில் அத்தி விநாயகர் சிலை…. ஆச்சரியத்தோடு பார்த்த பொதுமக்கள்….!!!!!

இந்தியாவில் முதன் முறையாக மிக உயரமான விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலம் நடைபெற்று 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் திருநாவுக்கரசர் தஸ்தபதியார் தலைமையில், 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக 1200 கன அடி அத்தி மரத்தை சேகரித்து 32 அடி அகலம் மற்றும் 12 அடி உயரத்தில் அத்தி மரத்தினால் மிக உயரமான விநாயகர் சிலையை செய்துள்ளனர்.

இந்த விநாயகர் சிலை இந்தியாவில் முதன்முதலாக செய்யப்பட்ட மிக உயரமான விநாயகர் சிலை ஆகும். இந்த சிலை தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்ததால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உயரமான விநாயகர் சிலையை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு சாமி தரிசனமும் செய்தனர்.

Categories

Tech |