இந்தியாவில் சிறந்த மருத்துவமனையாக அப்போலோ மருத்துவமனை அங்கீகாரம் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவிலுள்ள முக்கிய பிரபலங்கள் அனைவரும்தங்கள் உடல் நிலையை சரி செய்துகொள்ள நாடி செல்வது அப்பல்லோ மருத்துவமனையை தான். அது இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு மருத்துவமனை. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையை இந்தியாவின் சிறந்த மருத்துவ மனையாக அங்கீகரித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையும், தீ வீக் பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய அளவில் இதயம் மருத்துவம், இரையகக் குடலியவியல், எலும்பியல், நுரையீரல் மற்றும் நரம்பியல் ஆகிய சிகிச்சைகளில் முதலாவது இடத்திலும், புற்றுநோய் சிகிச்சை மற்றும் குடல் நோய்கள் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்கு இரண்டாவது இடத்திலும், நீரிழிவு சிகிச்சையில் மூன்றாவது இடத்திலும் அப்போலோ மருத்துவமனை உள்ளது.