இந்தியாவில் உள்கட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் போன்றவைகளை வைத்து மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் தரவரிசைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இது குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.