இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பேர் பெண் நீதிபதிகளாக உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் தான் நாட்டில் தலைநகர் டெல்லி இருக்கின்றது. அங்கு 12 பேர் பணியாற்றுகின்றனர். அதனைப்போலவே தெலுங்கானாவில் 10 பேர் உள்ளனர். இதனையடுத்து உத்திரகாண்ட், பீகார், மேகாலயா, திரிபுரா மற்றும் மணிபூர் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் எதிலும் தமிழ்நாடு டாப் தான்.
Categories