ஜம்மு-காஷ்மீரில் குல்மார்க் நகரில் புதிதாக தொடங்கப்பட்ட இக்லு கஃபே சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பனி பொலிவு அதிகரித்து இருப்பதால் அந்த சூழலை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பனி சிறப்பங்கல், இக்லூ என்று அழைக்கப்படும் பனி குடில் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டு புதிய முயற்சியாக இக்லு கஃபே தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இக்லு கஃபே காஷ்மீரின் குல்மார்க் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. பனி குடிலில் நாற்காலிகள், மேசைகள் என அனைத்தும் பனியால் செய்யப்பட்டிருக்கும். இந்த உணவகத்தில் உணவு அருந்துவதற்காக சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.