தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தின் மிகப் பழமையான மருத்துவ முறைகளான சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னைக்கு பக்கத்தில் சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேலும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்திற்கு அடுத்த 5 வருடங்களுக்கு ரூ.1,748 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் 1583 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 266.73 கோடியில் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.