Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தியாவிலேயே முதல்ல இது தான்… “கிரீன் போர்ட்” என்ற பெயரை பெற்று பெருமை… துவங்கப்படும் பல கோடி மதிப்புள்ள திட்டங்கள்…!!!

62 கோடி ரூபாய் திட்ட பணிகளை வ. உ. சி. துறைமுகத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவடைந்த பணிகளை காணொலி மூலம்  நேற்று(பிப்25) திறந்துவைத்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது இந்தியாவின் வளர்ச்சிகளுக்கு தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் 7,500 கோடி  ரூபாய் மதிப்பில் பெரிய மின் உற்பத்தித் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவைகள் மூலம் 65 விழுக்காடு மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். மத்திய அரசின் திட்டத்தின் மூலம் துறைமுகங்கள் நவீனமயமாக்கல் கடற்கரை பகுதி மக்களின் மேம்பாடு போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு  ரூபாய் 20 கோடி மதிப்பில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்கு தேவையான மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இந்தத் திட்டத்தால் இந்தியாவின் முதல் ‘கிரீன் போர்ட்’ என்ற பெயரை வ. உ. சி. துறைமுகம் பெறுகிறது.

Categories

Tech |