Categories
சினிமா

இந்தியாவிலேயே NO 1 இடத்தைப் பிடித்த விஜய்….. அஜித்தை பின்னுக்கு தள்ளிய சூர்யா…. வெளியான பட்டியல்….!!!!

இந்திய அளவில் மிக பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை ஆர் மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.ஏற்கனவே கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்பட்ட பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பெற்ற நிலையில் தற்போது அதே இடத்தை தக்கவைத்துக் கொண்டு அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய சினிமாவில் ஜூலை மாதம் அதிகம் பாப்புலரான நடிகர்களின் பட்டியலில் அஜித்தை சூர்யா பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் நடிகர் விஜய் முதல் இடத்திலும், அடுத்தபடியாக பிரபாஸ், மூன்றாவது இடத்தை ஜூனியர் என்டிஆர் பிடித்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் வெளியான பட்டியலில் அஜித் எட்டாவது இடத்திலும் சூர்யா பத்தாவது இடத்திலும் இருந்த நிலையில் தற்போது சூர்யா ஒன்பதாவது இடத்திலும் அஜித் பத்தாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனை ஆர் மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |