Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே நாம தான் இருக்கணும்… என்னோட ஆசை அதான்…! ஸ்டாலின் போடும் புது கணக்கு …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாட்டின்  தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் இந்த மாவட்டம். இவை அனைத்துக்கும் மேலாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்க கூடிய மாவட்டமும் இந்த கோவை மாவட்டம. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவ வேண்டும் என்பதுதான் உங்களுடைய ஆசை மட்டுமல்ல, என்னுடைய ஆசையும் அதுதான்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான தொழில்கள் உண்டு. அத்தகைய தொழில்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, சீர்துக்கி எல்லா வித பணிகளிலும் ஈடுபடுவது என்று அரசு திட்டமிட்டு இருக்கு. இந்தியாவிலேயே தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியாவின் முதல் தொழில் முகவரியாக தமிழ்நாடு மாற வேண்டும்.

தொழில் அமைப்பு மாநாடுகள்  தொடர்ந்து நடக்க இருக்கின்றன.  தொழில்துறையை வளர்ப்பதன் மூலமாக மக்களை வளர்க்க முடியும். மக்களின் வளர்ச்சியும் தான் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது.  இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம், அப்படி மாற்றும்  நேரத்தில் அதில் முதலிடம் இந்த கோவைக்கு தான் உண்டு என்பதை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.

திட்டங்களைப் பற்றி… அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை பற்றி…. அது எந்தெந்தக் கட்டங்களில் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பது பற்றி சொல்வதற்காக தான் இவ்வளவு விவரங்களை சொன்னேனே தவிர நான் எப்போது அதிகம் பேச மாட்டான் செயலில் என்னுடைய பணி  இருக்கும். பேச்சைக் குறைத்து, செயலில் திறமையை காட்டு என்ற பழமொழிக்கேற்ப நிச்சயமாக இந்த மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக எல்லாவற்றிலும் தலைசிறந்த மாவட்டமாக இருக்கிறது என்ற பெருமையை பெறுவதற்கு, நாங்கள் பணியாற்றத் தொடங்கி விட்டோம். அந்த பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |