இந்தியாவில் அடுத்த மூன்று வாரத்திற்கு கொரோனா நோய் பரவல் கடுமையாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகையே மிரள வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த மூன்று வாரத்திற்கு நோய் பரவல் மிக அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில் 7 மாநில யூனியன் பிரதேசங்களின் தலைமைச்செயலாளர், சுகாதார துறைச் செயலாளர், உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து இந்த ஆய்வுகள் மமேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நோய் பரவல் அடுத்த மூன்று வாரங்களுக்கு மிக கடுமையாக இருக்கும் என்றும் அனைத்து மாநிலங்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேவையான மருத்துவ வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டுமென்றும் எந்த சூழல் வந்தாலும் எதிர்கொள்ளும் அளவிற்கு தயாராக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.