இந்தியாவில் கடந்த வருடம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலங்கள் தொடர்பான விவரத்தை மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரானா பரவலின் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் சுற்றுலாத்துறை ஆனது வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள மகராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக 10.26 லட்சம் பேரும், தமிழ்நாட்டிற்கு 10.23 லட்சம் பேரும் வருகை புரிந்துள்ளனர்.
Categories