உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளத. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்த மாநிலத்தை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் முகாமிட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாநிலத்தில் பிரதாப் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் சாலை திட்டங்களுக்காக மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.5,00,000 கோடி முதலீடு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் உள்ள சாலைகளை போன்ற தரத்தில் நம் மாநிலத்திலும் சாலைகளை நான் உருவாக்குவேன் அவர் தெரிவித்தார்.