Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமோகமாக விற்பனையாகும் வீடுகள்…. பிரபல அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் தகவல்….!!

இந்தியாவில் வீடு விற்பனை அமோகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த CBRE ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் காலாண்டு வரை வீடு விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2022 முதல் காலாண்டு வரை 70,000 வீடுகள் விற்பனை ஆகியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டை விட வீடு விற்பனையானது 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 2022 முதல் காலாண்டு வரை டெல்லி, மும்பை, புனே போன்ற பகுதிகளில் 68 சதவீதம் வீடுகள் விற்பனை ஆகியுள்ளது. மேலும் மலிவு மற்றும் பட்ஜெட் வீடுகள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் நடுத்தர வீடுகளின் விற்பனை குறைந்துள்ளது. இதனையடுத்து விலையுயர்ந்த வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதில் சொகுசு மற்றும் பிரீமியம் வீடுகளின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

Categories

Tech |