இந்தியாவில் இன்று முதல் ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வு அமலாக்கி உள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு தளர்வு வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரவு நேரம் நடமாட இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியர்களை மீட்க சிறப்பு விமான சேவை தொடரும் தெரிவித்திருந்த மத்திய அமைச்சகம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு ஆகஸ்ட் 31வரை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச விமானங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்களை அழைத்து வர மட்டுமே வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.