Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியாவில் இதுவே முதன்முறை….. சிபிராஜின் “மாயோன்” ஜூன் மாதம் வெளியீடு….!!!

நடிகர் சிபிராஜ் இயக்கியுள்ள மாயோன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. அத்துடன் முழு படத்தையும் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகள் உணர்ந்து கொள்ளும் வகையில் திரைப்படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாயோன் படக்குழு இந்தியாவில் யாரும் செய்திராத வகையில் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் தங்களது பட டீசரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டது.

இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ‘மாயோனே..’ எனத் தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்ற ‘ழ்’ என்ற சொல் குறித்து பெரிய அளவில் விவாதங்களும் கிளம்பின. பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |