இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆண்டிற்கு 30,000 பேரை காப்பாற்ற முடியும் என சர்வதேச பத்திரிக்கையான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் வருடத்திற்கு 20,554 பேரை காப்பாற்ற முடியும் . கடினத் தன்மை கொண்ட தொப்பி வகை ஹெல்மெட்டுகள் அணிவதன் மூலம் 5,683 பேர் உயிரை காப்பாற்ற முடியும். சீட் பெல்ட் அணிந்து கொண்டு நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 3,204 பேர் உயிரை காப்பாற்றலாம் என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஒரு வருடத்தில் உலக அளவில் சாலை விபத்துகளில் மட்டும் சராசரியாக 13.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 90 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்வதாக இந்த ஆய்வில் கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தினால் வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் உயிர் தப்பிக்கலாம் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.