தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது புதிய தனியுரிமைக் கொள்கையை ரத்து செய்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிறுவனங்கள் உடன் பகிரப்படும். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இனி வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு கெடுவாக மே 15-ம் தேதியிலிருந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த கொள்கையை ரத்து செய்யப்பட்டுள்ளது.