ஒடிசா மாநிலத்தில் உள்ள தேன் கனல் என்ற மாவட்டத்தில் பெண்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் பாம்பு கடித்து விடும் என்று அசைவ உணவை சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள். இந்த வழக்கத்தை காலம் காலமாக பின்பற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் அசைவம் சாப்பிட்டால் கண் பாதிப்பு ஏற்படும் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்படும் என அந்த கிராம மக்கள் நம்பி வருகிறார்கள்.
இதில் இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருவதால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஆடு மற்றும் கோழி போன்ற இறைச்சிக்கான விலங்குகளை கூட வளர்ப்பதில்லை. மேலும் எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இங்குள்ள யாராவது அசைவம் சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக கடவுளின் தண்டனையை அனுபவிப்பார் என அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இப்படி ஒரு கிராமம் இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.