அமெரிக்கா இந்தியாவிலிருக்கும் அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் மருத்துவ சேவைகள் கிடைப்பதில் மிகவும் கடுமையாக உள்ளது. எனவே இந்தியாவில் இருக்கும் அமெரிக்க மக்கள் உடனடியாக நம் நாட்டிற்கு வருவது மிகவும் பாதுகாப்பானது என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து வரும் அமெரிக்கர்கள் வணிக போக்குவரத்துகள் மூலம் நாடு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.