Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இல்லன்னா… இங்கிலாந்துக்கு போறோம்… படையெடுக்கும் இந்தியர்கள்… தடுப்பூசி கிடைக்குமா..?

கொரோனா தடுப்பூசிகாக இந்தியர்கள் பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸிற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தடுப்புசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பைசர், மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவசர தேவைக்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாமா என்று முடிவு எடுக்காமல் இருந்து வந்தது.

இதில் இங்கிலாந்து முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன் படுத்தலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. பைசர் நிறுவனத்திடமிருந்து 4 கோடி தடுப்பூசிகளுக்கு இங்கிலாந்து அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த மருந்தை வைத்து அந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு தடுப்பூசி போட முடியும்.

முதற்கட்டமாக காப்பகங்களில் தங்கியிருப்பவர்கள், அவர்களை பாதுகாக்கும் ஊழியர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் போடப்படும் என்று அறிவித்துள்ளது. இதை அடுத்த வாரமே செயல்படுத்த உள்ளதாகவும் சுகாதார செயலாளர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கு முதல் அங்கீகாரம் அளித்த நாடு என்ற பெருமையை இங்கிலாந்து தட்டிச் சென்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசியை பெறுவதற்காக இந்தியாவை சேர்ந்த பலர் விமானத்தின் பயண ஏற்பாட்டாளர்களை விசாரிக்க தொடங்கியுள்ளனர். இந்த தடுப்பூசியை போடுவதற்காக பிரிட்டன் செல்ல விரும்பும் பயணிகளுக்கு மூன்று இரவுகள் கொண்ட ஒரு டிராவல் பேக்கேஜை அறிமுகம் செய்யவுள்ளதாக ஈசிமைடிரிப் எனும் பயண ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேசமயம் பிரிட்டனுக்கு சென்றால் இந்தியர்களால் தடுப்பூசி பெறமுடியுமா? இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அங்கு தடுப்பூசி போடுவார்களா என்று விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விமான நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள ஹோட்டல்கள், மருத்துவமனை உள்ளிட்டவற்றுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |