இந்தியாவில் தற்போது வரை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி உள்ளதால் அனைத்து நாடுகளும் அச்சமடைந்துள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 லிருந்து 90 ஆக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று முதல் இந்தியா -பிரிட்டன் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.