Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல்… ஆன்லைன் கட்டண சேவைக்கு தடை… அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் கட்டண சேவை முறைக்கு தடை விதிக்கப்படுவதாக அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனமான பேபால் ஹோல்டிங்ஸ் இன்க் இந்தியாவில் உள்நாட்டு கட்டண சேவையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1 முதல் இந்திய வணிகர்களுக்கான சர்வதேச விற்பனையை செயல்படுத்துவதில் எங்கள் கவனத்தை முற்றிலுமாக செலுத்துவோம். இந்தியாவில் உள்ள எங்கள் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளது.

அதனைப் போலவே ஏப்ரல் 1 முதல் இந்தியாவுக்குள் உள்நாட்டு கட்டண சேவை களை நாங்கள் வணங்க மாட்டோம். பயண மற்றும் டிக்கெட் சேவை மேக் மை ட்ரிப், ஆன்லைன் மூவி புக்கிங் செயலியான புக்மைஷோ மற்றும் உணவு விநியோக செயலியான swiggy போன்ற பல இந்திய ஆன்லைன் பயன்பாடுகளில் paypal கட்டணம் செலுத்தும் விருப்பமாகும். இந்தியாவுக்குள் உள்நாட்டு கட்டண சேவைகளை இனி வழங்கப்படமாட்டாது என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |