இந்தியாவில் ஒரே ஆண்டில் 1.31 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தகவல் அளித்த அவர்,கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 1.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். அதே ஆண்டில் 3.48 லட்சம் பேர் விபத்தால் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 4.49 லட்சம் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
அதாவது இந்தியாவில் 2020-ம் ஆண்டில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 48 ஆயிரத்து 279 பேர் காயம் அடைந்தனர். * 2019-ம் ஆண்டில் நாட்டில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 2 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 361 பேர் காயம அடைந்துள்ளனர்.