இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 942 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டி 66,999 ஆக கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தற்போது வரை 23,96,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,95,982 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 47,033 பேர் உயிரிழந்துள்ளனர். 6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் சதவிகிதம் 70.77 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதம் 27.27 ஆகவும் இருக்கின்றது.