தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் எதன் அடிப்படையில் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய 10-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊரடங்குக்கு பிறகு கொரோனா பரவல் தமிழகத்தில் பெருமளவில் குறைந்துள்ளது எனவும், சென்னையில் மிக வேகமாக குறைந்து வருகிறது எனவும் குறிப்பிட்டார். ஸ்டெராய்டு இன்ஜக்சன் எடுத்துக் கொண்டவர்களுக்கு கருப்புப் பூஜ்சை நோய் வருவதாக கூறப்படுகிறது எனவும்,
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற ஸ்டெராய்டு மருத்துவம் கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த நோய் வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் கொரோனா உயிரிழப்புகளை முழுமையாக வெளிப்படுத்தினால் தான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், அச்சமும் வரும் என தெரிவித்தார்.