இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட SUV வெளியீடுகளில் ஒன்றான மஹிந்திரா XUV700 வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இப்புதிய காரை தனது புதிய லோகோவுடன் அந்நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. ஏற்கனவே மஹிந்திரா XUV700-ன் அம்சங்கள் குறித்து தகவல் வெளியிட்ட மஹிந்திரா நிறுவனம், இப்போது அதன் ஆரம்ப விலையை வெளியிட்டுள்ளது.
இந்த வாகனத்தின் மூலம் மஹிந்திரா தங்களது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக 360 டிகிரி சவுண்ட் இடம்பெற்றுள்ளது. 5 பேர் மற்றும் 7 பேர் அமரும் வசதி கொண்ட இந்த வாகனம் 1,999cc, 2,198cc எஞ்சின், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற வகையிலும் கிடைக்கிறது. இந்த வாகனத்தின் விலை ரூ.11.99 லட்சத்தில் தூங்குகிறது.