இந்தியாவில் கருவுறுதல் கடந்த பத்து ஆண்டுகளில் 20% அளவுக்கு குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 15 வயது முதல் 49 வயது வரையிலான 1000 பெண்களில் ஒரு ஆண்டுக்கு குழந்தை பெற்று எடுக்கும் விகிதம் 20% அளவுக்கு குறைந்துள்ளது. ஜிஎஃப்ஆர் என்பது பெண்கள் கருவுறுதல் சராசரி விகிதம். அதாவது 2008-2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் கருவுறுதல் சராசரி 86.1% இருந்தது. இதுவே 2018-20 ஆம் ஆண்டுகளில் 68.7 ஆக குறைந்துள்ளது.
அதனை தொடர்ந்து மாதிரி பதிவு முறை வெளியிட்ட இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் நகரப் பகுதிகளில் 20.2%, கிராம பகுதியில் 15.6% பெண்கள் கருவுறுதல் விகிதம் குறைந்திருப்பது உறுதி ஆகிவிட்டது. இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கூறியது, பெண்கள் கருவுறுதல் விகிதம் குறைகிறது என்பது மக்கள் தொகை பெருக்கத்தில் ஏற்படும் குறைவை காட்டுகிறது. இது உண்மையில் ஒரு நல்ல அறிகுறி தான். பெண்களின் திருமண வயது உயர்ந்தது, பெண் கல்வி, கருவுறுதலை தவிர்ப்பதற்கான கருவிகள் எளிதாக கிடைப்பது போன்றவை இதற்கு மிக முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அதிக படித்த பெண்கள் இருக்கும் மாநிலங்கள் இந்த பட்டியலில் முதன்மை இடத்தை வகிக்கின்றது.