மலக்குழி மரணங்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை என்று ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் 66,692 பேர் நேரடியாக மழைத்துளியை சுத்தம் செய்பவர்கள் ஆக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எத்தனை பேர் மலக்குழி மரணங்களில் உயிர் இழந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு, மலக்குழி மரணங்கள் தொடர்பாக ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு 309 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்றும் ஒன்றிய சமூகநீதி இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். சென்ற வாரம் மாநிலங்களவையில் அமைச்சர் வீரேந்திர குமார் நாட்டில் 58,098பேர் கையால் மலம் அள்ளுகின்றனர் என்று கூறியதற்கு முரணாக இது அமைந்துள்ளது.