Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கைவைக்கும் பாகிஸ்தான்….. கண்டனம் தெரிவித்த மத்திய அரசு

பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை நிராகரித்த மத்திய அரசு அது பற்றிய கண்டனங்களை பதிவிட்டு வருகிறது.

காஷ்மீர் மாநிலம் முழுவதையும், பஞ்சாப்பின் சில பகுதிகளையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதனை வெளியிட்ட பிரதமர் இம்ரான் கான், இதற்கு தனது மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலுமாக நிராகரித்த மத்திய அரசு அது தொடர்பான கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது.

இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டிருக்கின்றார் வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது அரசியலுக்கு அபத்தமான நடவடிக்கை. அதே சமயத்தில் இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை உரிமை கொள்வதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. இத்தகைய ஆபத்தான கூற்றுகள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையிலோ, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை என செய்தி வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |