கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்படும் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் போன்ற உதவிகளை இந்தியாவுக்கு வழங்கி வரும் நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து உதவிகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Ignazio Cassis கூறுகையில் ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் உடைய உதவிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.