Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்…. கவலையை அளிக்கிறது…. அறிவிப்பு வெளியிட்டுள்ள உலக கொரோனா தடுப்பு அதிகாரி….!!

இந்தியாவின் தற்போதைய நிலை சோகத்தை ஏற்படுத்துகிறது என உலக கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க சுகாதார மற்றும் உலகளாவிய குழந்தை தடுப்பு சுகாதார பிரிவு ஒருங்கிணைப்பு அதிகாரி கெயில் இ ஸ்மித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் கொரோனாவின் அதிகரிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எங்களின் ஆய்வுப்படி இந்தியாவில் அதன் உச்சகட்டத்தை அடையவில்லை. மக்கள் நோயால் பாதிக்கப்படுவதில் சற்று இடைவெளி இருப்பதால் அதன் தாக்கம் அதிகரித்துள்ளதால் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் இந்தியாவுக்கு மருத்துவ உதவி பொருள்கள், ஆக்சிஜன் போன்ற உதவிகளை அமெரிக்க அரசின் ஒப்புதல் பெற்று விரைவாக செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |