கொரோனாவை அடுத்து விசித்திர நோய் ஆந்திராவில் பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எழுரு என்ற பகுதியில் வசித்து வரும் மக்களில் சிலர் வாந்தி, மயக்கம், வாயில் நுரை தள்ளுதல் மற்றும் வலிப்பு என பல்வேறு அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென மயக்கம் அடையும் மக்கள் விசித்திரமாக கூச்சலிடுவது அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.