Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை உச்சத்தில் உள்ளதா?…. நிபுணர் அளித்த பதில் என்ன தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவரிடம் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை உச்சம் தொட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் முதலில் கொரோனா பாதிப்பு மெட்ரோ நகரங்களில் தான் ஆரம்பித்தது. அதனால் முதலில் அங்கு தான் முடிவு பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ஒமைக்ரான்  சட்டத்துக்குப் புறம்பானது. ஒமைக்ரான் என்பது நோய்த்தொற்று முன்னேற்றத்தில் இருந்து ஒரு விலகல் ஆகும். 2 தொற்றுநோய்கள் அருகருகே உள்ளது. ஒன்று டெல்டா மற்றொன்று சமீபத்தில் கவலைக்குரிய வைரஸ் ஒமைக்ரான் என கூறியுள்ளார்.

Categories

Tech |