Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்ட விரோதமாக நுழைந்த வங்கதேச குடும்பம்…. எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி…!!!

வங்கதேசத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அப்போது எல்லை பாதுகாப்பு படையினரிடம் அவர்கள் பிடிபட்டனர். அதன் பிறகு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறியது, தன்னுடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவில் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் என்பதால் இங்கு வந்தோம் என்று தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு அவர்கள் அனைவரும் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் வங்கதேச எல்லை காவல் படையினரிடம் நேற்று காலை 8:30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டனர் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4096 கிலோ மீட்டர் தூரம் விரிந்துள்ள இந்தியா-வங்கதேச எல்லையை கண்காணிக்க பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதும், அத்துமீறி நுழையும் வங்கதேசத்தினரை அவர்களது நாட்டிற்கே திரும்பி அனுப்பி வருவதும் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |