Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி…. பிரதமர் மோடி திட்டவட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் போடப்படும் என்றும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறாருக்கும் தடுப்பூசி செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் நேற்று அனுமதி வழங்கியுள்ளார். 12 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரு அவசர பயன்பாட்டுக்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் நிபந்தனைகளுடன் கோவக்ஷின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரைத்துள்ளது. கொரோனா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மற்றும் நிபுணர் குழு மதிப்பீடு செய்தது. அதன் பின்னர் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கூடுதல் தகவல்களை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கேட்டுப் பெற்றார்.

இதையடுத்து 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு தலைமை தடுப்பூசி மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியதாவது, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். நாட்டின் இயல்பு நிலை திரும்பி வருகிறது. பொருளாதாரமும் சீரடைந்து வருகிறது. இதனிடையே உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல், போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். இதையடுத்து ஜனவரி 3-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் கொரோனாவை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Categories

Tech |