இந்தியாவில் சீன மொபைல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் எல்லையில் சீன வீரர்களின் லடாக் பிரச்சினை காரணமாக சீன ஆப்களை இந்தியா தடை செய்து வருகின்றது. இந்நிலையில் ஐடிசி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனத் தயாரிப்புகளான ஜியோமி, விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ ஆகிய பிராண்டுகளின் 63.01 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் லடாக் தாக்குதல் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும், சீன மொபைல்களின் விற்பனை குறையவில்லை என்பதை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.