Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜனவரி 26 முதல் FAU-G… 40 லட்சம் பேர் முன்பதிவு…!!!

இந்தியாவில் ஜனவரி 26-ஆம் தேதி பப்ஜி போன்று உருவாக்கப்பட்டு வரும் FAU-G என்ற ஆன்லைன் விளையாட்டு வெளியாக உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் விளையாட்டு தற்போது அடிமையாகியுள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். அதில் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டாய் பல உயிர்கள் பறிபோய் உள்ளன. அதனால் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பப்ஜி போன்ற இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் FAU-G ஆன்லைன் விளையாட்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து இந்த விளையாட்டுக்கான முன்பதிவு 40 லட்சத்தை கடந்துள்ளது கூறப்படுகிறது. இந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்திய வீரர்களின் தியாகங்கள் குறித்துச் சொல்லும் என இதை தயாரிக்கும் என்கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |