Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் ஜீன்ஸ் பேண்ட்-ஐ தடை செய்ய வேண்டும்”… முதல்வர் கருத்தால் சர்ச்சை..!!

இந்தியாவில் ஜீன்ஸ் பேண்டை தடை செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேசம் அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் முதல்வர் கிழிந்த ஜீன்ஸ் அணிவது அநாகரீகமானது என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இவரின் கருத்துக்கு பல திரைப்பட நட்சத்திரங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசம் அமைச்சர் கமல் பட்டியலும் இந்த கருத்தை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி அணியப்படும் உடைகளால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அது கலாச்சாரத்தை காப்பாற்றுவது நமது கடமை. ஜீன்ஸ் போன்ற உடைகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கமல் தெரிவித்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |