இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.
இதுவரை இந்தியாவில் 2,135 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 828 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 653, டெல்லியில் 464, கேரளாவில் 185, ராஜஸ்தானில் 174, குஜராத்தில் 154, தமிழகத்தில் 121, தெலங்கானாவில் 84, கர்நாடகாவில் 77, ஹரியானாவில் 71 ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி இந்தியாவில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 59,095 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.