ஆளில்லா குட்டி விமானத்தின் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கு 14 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆளில்லா குட்டி விமானங்கள் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக 14 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தக்ஷா அன்மேன்டு சிஸ்டம்ஸ், ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ் ஆகிய 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்த்திற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூபாய் 120 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்காக நிறுவனங்களுக்கு கடந்த 10-ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 14 நிறுவனங்களின் பட்டியல் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. மேலும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் இறுதி பட்டியல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.