Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் திடீரென அதிகரித்த வீட்டு வாடகை” சென்னையில் மட்டும் இவ்வளவா….? வெளியான ஷாக் நியூஸ்….!!!!

புனே, கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த தகவலை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்ற நகரங்களை விட மும்பையில் வாடகை அதிக அளவு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ பகுதியில் உள்ள சொகுசு வீடுகளுக்கான வாடகை 2.7 லட்சம் ரூபாயிருந்து 3.1 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதன் பிறகு வொர்லி பகுதியில் 2 லட்ச ரூபாயிலிருந்து 2.35 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டியில் 11 சதவீதமும், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 15 சதவீதமும் வாடகை அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள ராஜாஜி நகரில் 55,00 ரூபாயிலிருந்து, 65,000 ரூபாயாகவும், ஜே.பி நகரில் 13 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை கோட்டூர்புரத்தில் 74,000 ரூபாயிலிருந்து 84,000 ரூபாயாகவும், அண்ணா நகரில் 56,000 ரூபாயிலிருந்து 63,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |