Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா… ஒரே நாளில் 57,982 பேருக்கு கொரோனா உறுதி…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 50,921 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6,76,900 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,19,843 ஆக இருக்கின்றது. இந்தியாவில் தற்போது வரை கொரோணா பாதிப்பை கண்டறிய 3,00,41,400 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 7,31,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |