தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேட படுபவர்கள் என்று அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 8 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் அரசு விடுவித்துள்ளது.
ஆப்கானில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன.
அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆப்கானை கைப்பற்றிய பின்னர் புல்-இ-சர்கி மற்றும் பதம் பாக் ஆகிய 2 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் தலிபான் விடுதலை செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த 8 பேரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பில் சேர நங்கார் பகுதிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.