இந்தியாவில் தொடரும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனையால் மின்சாரம் தயாரிப்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ளது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் மின் உற்பத்தி தொடங்க உள்ள உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நிலைமை விரைவில் சீரடையும் என மத்திய அரசு கூறியுள்ளது.