சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்து ராகுல் டிராவிட்டை ஓவர்டேக் செய்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்..
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸை கைப்பற்றிய இந்திய அணியின் ரோஹித் பந்து வீச முடிவு செய்தார்..
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.. இருப்பினும் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடியதால் 19.5 ஓவரில் 187/4 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது இந்திய அணி.. இதனால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையையும் தட்டி தூக்கியது..
இந்த போட்டியில் விராட் கோலி 48 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் அவர் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.. சமீப காலங்களாக பார்மில் இல்லாமல் இருந்த கிங் கோலி தற்போது மெல்ல மெல்ல ஃபார்முக்கு திரும்பியது மட்டுமல்லாமல் புதுப்புது சாதனைகளையும் படைத்து வருகிறார்..
அதன்படி இந்திய அணிக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கக்கூடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்..
https://twitter.com/kannada_lover/status/1574083878024671232
அதே சமயம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கிறார்.. அவருக்கு அடுத்தபடியாக கோலி 2ஆவது இடத்திலும், டிராவிட் 3ஆவது இடத்திலும், சவுரவ் கங்குலி 4ஆவது இடத்திலும், மகேந்திர சிங் தோனி 5ஆவது இடத்திலும் இருக்கின்றனர்..
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் :
1) சச்சின் டெண்டுல்கர் : 34,357 ( போட்டிகள் 664 )
2) விராட் கோலி : 24,078 (போட்டிகள் 471 )
3) ராகுல் டிராவிட் : 24,064 ( போட்டிகள் 404)
4) சவுரவ் கங்குலி : 18,443 ( போட்டிகள் 421)
5) எம்.எஸ் தோனி : 17,092 ( போட்டிகள் 535)